கெய்ரோ:
எகிப்தில் டோலமிக் சகாப்தம் என கூறப்படும் கிமு. 305-30 காலக்கட்டத்தில் அடக்கம் செய்யப்பட்ட 50 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இறந்தவர்களுக்கு உலகில் மீண்டும் பிறப்பார்கள் என்பது பண்டைய எகிப்தியர்களின் நம்பிக்கை. அதனால் இறந்தோர் உடலை பாதுகாக்க வேண்டும் என்பது அவர்கள் நம்பிக்கை.

இந்நிலையில், எகிப்து தலைநகர் கெய்ரோவின் தெற்கே மின்யா என்ற இடத்தில் மம்மீஸ் எனப்படும் 50 கல்லறைகளை, அந்நாட்டின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதில் 12 கல்லறைகளில் குழந்தைகள் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.
கற்கள் மற்றும் மரங்களால் மூடப்பட்டு உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தன.

50 கல்லறைகளில் இருந்த உடல்களைப் பார்க்கும்போது, உயர் பதவி வகித்தவர்களாக இருக்கக் கூடும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.