எகிப்து ஓபன் ஸ்குவாஷ் – காலிறுதிக்கு சென்றார் தமிழகத்தின் ஜோஷ்னா சின்னப்பா!

கெய்ரோ: எகிப்து ஓபன் ஸ்குவாஷ் தொடரின் காலிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாட்டின் ஜோஷ்னா சின்னப்பா.

உலகத் தரவரிசையில் நம்பர்-1 இடத்திலுள்ள ஜோஷ்னா சின்னப்பா, மூன்றாவது சுற்றில் எகிப்து நாட்டின் ஃபரிதாவை எதிர்கொண்டார்.

இப்போட்டியில், முதல் இரண்டு செட்களை 11-7, 11-6 என்ற கணக்கில் வென்றார். ஆனால், அடுத்த இரண்டு செட்களை 7-11, 10-12 என்ற கணக்கில் இழந்தார். இதனால், வெற்றியாளரை தீர்மானிக்கும் 5வது செட் நடத்தப்பட்டது.

இந்த செட்டை 11-8 என்ற கணக்கில் வென்ற ஜோஷ்னா, இத்தொடரின் காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.