எகிப்தில் 13 பயங்கரவாதிகள் உள்பட 31 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை
கெய்ரோ:
எகிப்து நாட்டில் 13 பயங்கரவாதிகள் உள்பட 31 பேருக்கு 2 நீதிமன்றங்களில் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
காவல்துறையினரை கொன்றுவிட்டு ஜெயிலில் இருந்து தப்பியவர், பாதுகாவலரை படுகொலை செய்தவர் உள்பட 31 பேருக்கு விசாரணை நடத்தி வந்த 2 நீதிமன்றங்கள் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
எகிப்து நைல் நதி நகரில் உள்ள எல்-ஜகாஜிக் கிரிமினல் நீதிமன்றம், காவலர்களை சுட்டுத் தள்ளியது குறித்த வழக்கில் 18 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து.
குற்ற வழக்குகளில் சிக்கியவர்கள் குறித்து விசாரணை செய்து வந்த காவலர்களை 18 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினர். இது தொடர்பான விசாரணையில், அவர்கள் மீதான குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டதாக கூறி, 18 பேர்களுக்கும் நீதிமன்றம் மரண தண்டனை அளித்தது.
இந்த நிலையில், மற்றொரு நீதிமன்றத்தில் நடைபெற்று மத பயங்கரவாதிகள் மீதான வழக்கில், யங்கரவாதிகள் 13 பேருக்கு மரண தண்டனை விதித்து அங்குள்ள கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.
தண்டிக்கப்பட்ட 13 பேரும் 2016-ம் ஆண்டு, சிறையில் இருந்து தப்பியதாக குற்றம் சாட்டப்பட்டி ருந்தது.
மொத்தத்தில் நேற்று மட்டும் எகிப்து நீதிமன்றங்கள் 31 பேருக்கு மரண தண்டனை விதித்து உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.