2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எகிப்து கல்லறையில் பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிப்பு

கெய்ரோ:

எகிப்தில் அழகிய மாளிகையிலிருந்து 2 ஆயிரம் ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.


எகிப்தில் இறந்தவர்கள் மீண்டும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கை பழங்காலத்தவர்களுக்கு இருந்துள்ளது.
அதனால் அவர்களது உடல்களை பாதுகாத்து வைத்திருக்கும் பழக்கம் பண்டைய எகிப்தியர்களுக்கு இருந்துள்ளது.

மம்மிக்கள் என்றழைக்கப்படும் இத்தகைய கல்லறைகள் உலக புகழ்பெற்று விளங்குகின்றன.
எகிப்தில் தோண்டத் தோண்ட இத்தகைய மம்மிக்களே கிடைத்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாக்கப்பட்ட 2 மனித உடல்களுடன் எலிகள் மற்றும் வேறு விலங்குகளின் உடல்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவை 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்று தெரியவந்துள்ளது. இந்த உடல்கள் இருக்கும் கல்லறை மூத்த அதிகாரிகளான இருந்த துத்து மற்றும் அவரது மனைவி என்று தெரியவந்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் இங்குள்ள ஓவியங்களை திருட கடத்தல்காரர்கள் குழி தோண்டியபோது பிடிபட்டனர். அப்போது இந்த கல்லறை இருப்பது தெரியவந்தது.

இப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கல்லறைகளில் மிகச் சிறப்பு வாய்ந்தது இந்த கல்லறைதான் என்கிறார் எகிப்து சுப்ரீம் கவுன்சில் பொதுச் செயலர் மொஸ்டாபா வஜ்ரி.

இந்த கல்லறை இருந்த மாளிகையில் இருந்து கிடைத்த அழகிய ஓவியங்கள் பார்வையாளர்களை கவரும் என்றும் அவர் தெரிவித்தார்.