பாலியல் சீண்டல் : குரங்கையும் விட்டு வைக்காத எகிப்துப் பெண்ணுக்கு சிறை

நெயில் நெல்டா, எகிப்து

கிப்து நாட்டில் குரங்குக்கு பாலியல் சீண்டல் செய்ததாக ஒரு பெண்ணுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் பாலியல் சீண்டல்களால் இளம் பெண்களும் இளைஞர்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.    இந்த பாலியல் சீண்டல் குற்றங்களை பெண்களும் செய்வதாக பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன.   தற்போது அத்தகைய ஒரு விபரீத தகவல் வெளியாகி உள்ளது.

எகிப்து நாட்டில் விலங்குகள் விற்பனை செய்யும் கடையில் இருந்த ஒரு குரங்கை ஒரு பெண் பாலியல் சீண்டல் செய்யும் வீடியோ வெளியாகியது   இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.   இந்த வீடியோவைக் கண்ட அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.   அதை ஒட்டி காவல்துறை விசாரணையில் இறங்கியது.

விசாரணையில் அந்தப் பெண் பெயர் பாஸ்மா அகமது என்பது தெரிய வந்தது.   சுமார் 25 வயதான அந்தப் பெண் எகிப்து நாட்டிலுள்ள நெயில் நெல்டா நகரில் வசிப்பவர் ஆவார்.   அவர் கைது செய்யப்பட்டு எகிப்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் பாஸ்மா அகமதுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.   பாஸ்மா அகமது தாம் விளையாட்டுக்காக அப்படி செய்ததாகவும் வேண்டுமென்றே செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.,

கார்ட்டூன் கேலரி