கெய்ரோ: எகிப்தில் கண்டெடுக்கப்பட்ட மம்மி சவப்பெட்டியை அகழ்வாராய்ச்சியாளர்கள், பொது பார்வையாளர்கள் மற்றும் மீடியாக்களின் முன்பாக திறந்த நிகழ்வு, உலகெங்கும் பெரிய வைரலாகியுள்ளது.
எகிப்தில் சக்காரா என்ற இடத்தில், மொத்தம் 59 பழங்காலத்திய மம்மி சவப்பெட்டிகள் அகழ்வாராய்ச்சியாளர்களால் கண்டெடுக்கப்பட்டன. இந்த மம்மி சவப்பெட்டிகள் உலகெங்கும் கவனத்தை ஈர்த்தன.
தற்போது, அந்த சவப்பெட்டிகளில் ஒன்று, பொதுப் பார்வையாளர்கள் மற்றும் மீடியாக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ மிகப்பெரிய வைரலாகியுள்ளது உலகெங்கிலும்.
கடந்த 2600 ஆண்டுகளில், மம்மி சவப்பெட்டி ஒன்று, பொது பார்வையாளர்கள் முன்னிலையில் திறக்கப்படுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் எகிப்திற்கான நியூசிலாந்து நாட்டின் தூதுவர் கிரேக் லீவிஸும், எகிப்து நாட்டு சுற்றுலா மற்றும் பழம்பொருட்கள் துறை அமைச்சருடைய அழைப்பின் பேரில் கலந்துகொண்டார்.
அதேசமயம், மம்மி சவப்பெட்டிகள் தொடர்பான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன என்றும், சவப்பெட்டி அடுக்குகள் கண்டறியப்பட்டுள்ள என்றும், அவை குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மம்மி சவப்பெட்டி திறப்பு வீடியோவைக் காண; https://twitter.com/i/status/1312362763306532864