பிரான்ஸ்: பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மிகப்பெரிய போராட்டம் – ஈபிள் கோபுரம் மூடல்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து பிரான்சில் மிகப்பெரிய போராட்டம் நடைபெற உள்ளதால் ஈபிள் கோபுரம் முடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீப காலமாக பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோல் 1.24 யூரோவில் இருந்து 1.53 யூரோவரை உயர்த்தப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 23 சதவிகிதம் அதிகம் என்றே கூறப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கடந்த முன்று வாரமாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

eiffel

ஒருசில இடங்களில் வன்முறைகளும், கலவரங்களும் வெடித்தன. இதன் எதிரொலியாக பெட்ரோல் விலை உயர்வை ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்க அரசு முடிவெடித்தது. எனினும், பெட்ரோல் விலை உயர்வை முழுவதுமாக குறைக்க வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட்ட போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு மஞ்சள் ஜாக்கெட் போராட்டம் என பெயர் சூட்டிய மக்கள் மஞ்சள் சட்டை அணிந்தபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறன்றது.

இந்நிலையில் திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. பிரான்ஸ் முழுவதும் 89 ஆயிரம் போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தலைநகர் பாரீசில் மட்டும் 8 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒருசில இடங்களில் ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முக்கிய பகுதியில் கடைக்களை அடைக்க அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை நடைபெற உள்ள போராட்டத்தின் போது உலகப்புகழ் பெற்ற ஈபிள் கோபுரம் சேதமடையக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதனால், நாளை ஈபிள் கோபுரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி