சேலம் பகுதியில் 8 உணவு விடுதிகள் சுகாதாரமானவை! எஃப்எஸ்எஸ்ஏஐ

சேலம்:

சேலம் பகுதியில் எட்டு ஹோட்டல்களுக்கு FSSAI இலிருந்து சுகாதார மதிப்பீடு சான்றிதழ் கிடைத்துள்ளது. இதை அந்த ஓட்டல்கள் பார்வையாளர்களுக்கு வைத்து நன்மதிப்பை பெற்று வருகின்றன.

FSSAI  எனப்படும் மத்தியஅரசால் தொடங்கப்பட்டுள்ள உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம். உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இந்த உணவு பாதுகாப்பு அமைப்பின் தலைமை அலுவலகம் டெல்லி உள்ளது. கிளை அலுவலகங்கள் கவுகாத்தி, கல்கத்தா, சென்னை, மும்பை ஆகிய நகரங்களில் உள்ளன. இந்த அமைப்புக்கு ஆய்வுக்கூடங்களும் உன்ன. இந்த அமைப்பை சேர்ந்தவர்களால், உணவுகள், உணவுப் பொருட்களை பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு, அவை சுகாதாரமானவை என்று ஆய்வு செய்து வருகிறது.

அதன்படி, சேலம் பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 8 ஓட்டல்களில் உணவுகள் பாதுகாப்பானவை என்று சான்றிதழ் வழங்கப்பட்டு உள்ளது. FSSAI விதிமுறைகளுக்கு இணங்க  அங்கு சுகாதாரமான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக  தெரிவித்து உள்ளது. இதை ஒரு ஓட்டல் நிர்வாகம் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறியுள்ள உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன்,  எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஏ விதிமுறைகளின்படி, உணவு விடுதிகள் செயல்படுகின்றனவா என்பதை உறுதி செய்வதே எஃப்எஸ்எஸ்ஏஏ நோக்கம் என்றும், அதன்படி “உணவு கையாளுபவர்களின் தனிப்பட்ட சுகாதாரம், சமையலறை சுகாதாரம், நீர் ஆதாரம், சாப்பாட்டு பகுதி, நீர் ஆதாரம் மற்றும் பிறவற்றை உள்ளடக்கிய உணவு கையாளுதலின் ஒவ்வொரு அம்சங்களையும் தணிக்கை ஆராய்ந்து, 1 முதல் 5 வரையிலான சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றார். சேலம் மாவட்டத்தில் எட்டு ஹோட்டல்களுக்கு மதிப்பீடுகள் கிடைத்துள்ளன என்றும் தெரிவித்து உள்ளர்.