கூகுள் வாய்ஸ் : தமிழ் உட்பட 8 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டன

லிஃபோர்னியா

சர்வதேச இணைய தள நிறுவனமான கூகுளில் குரல் முலம் தேடுதலை நடத்த தமிழ் உட்பட 8 இந்திய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன

கூகுள் இணைய தளத்தின் மூலம் தேடுதல் நடத்த குரலை உபயோகப்படுத்தலாம் என்பது தெரிந்ததே.  அதில் இதுவரை இந்திய மொழிகளில் இந்தி மொழி மட்டுமே இருந்தது.  தற்போது மேலும் 8 மொழிகள் இணைக்கப்பட்டுள்ளன.  அவை வங்காளம், குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, தமிழ், தெலுங்கு, உருது ஆகியவை ஆகும்.

இதன்படி வாய்ஸ் செட்டிங் மெனு மூலம் மேற்கண்ட மொழிகளை அல்லது மொழிகளில் ஒன்றை தேர்வு செய்து உபயோகப்படுத்த முடியும்.  இந்த மொழிகளைக் கொண்டு குரல் மூலம் ஜி போர்டு மூலம் அந்தந்த மொழிகளில் தட்டச்சவும் முடியும்.   ஏற்கனவே தமிழில் தட்டச்சு செய்வோர் செல்லினம் போன்ற ஆப்களை நிறுவுவதன் மூலமே செய்கிறார்கள்.    இனி ப்ளே ஸ்டோரில் ஜிபோர்ட் டவுன் லோட் செய்து அதில் மொழியில் தமிழை தேர்ந்தெடுத்தால்,  நாம் பேசுவதை அந்த செயலி டைப் செய்து விடும்.

இந்த மொழி தேடலை விரைவில் கூகுள் மொழிமாற்ற செயலியிலும் சேர்க்கப்படும் என கூகுள் நிறுவனம் தெரிவிக்கின்றது.    இத்துடன் கூகுள் குரல் தேடலுக்கான மொழிகள் 119 ஆகி விட்டது.