கொரோனா: மலேசியாவில் கடந்த 24மணி நேரத்தில் 8 பேர் பலி

லேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 8 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

உலக நாடுகளை  ஆட்கொண்டுள்ள கொரோனா வைரஸ் மலேசியாவிலும் தீவிரமடைந்து வருகிறது. அங்கு இதுவரை  2470 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 35 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 150 பேர்  புதியதாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதே போல 24 மணி நேரத்தில்  8 பேர் பலியாகி இருப்பதாகவும்  உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

தென்கிழக்காசியாவில், அதிக அளவிலான கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள நாடாக மலேசியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மரணம் அடைந்தவர்கள் அனைவரும் மலேசியாவை பூர்விகமாக கொண்டவர்கள் என்று கூறப்பட்டு உள்ளது.

மேலும், கொரோனா தொற்றிலிருந்து 388 பேர் குணமடைந்து இருப்பதாகவும் தெரிவித்து உள்ளது.