ண்டன்

பிரபல விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் அவருடைய நண்பருக்கு எழுதிய கடிதம் $ 1.06.250 க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த புகழ்பெற்ற விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  இவர் புகழ்பெற்ற சார்பியல் கோட்பாடு எனப்படும் ரிலேடிவிடி தியரியை கண்டு பிடித்தவர் ஆவார்.  இதன் மூலம் பௌதிகத் துறையில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  இதை 1916 ஆம் வருடம் அவர் வெளியிட்டார்.

ஐன்ஸ்டைன் இது குறித்து அவர் நண்பருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  தமது கோட்பாடு விஞ்ஞான உலகில் ஒப்புக் கொண்டதற்காக தனது மகிழ்ச்சியை அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  உலகப் புகழ் பெற்ற பிரிட்டனின் ஏல நிறுவனமான கிறிஸ்டி ஏலம் விட்டது,  இந்தக் கடிதம் அமெரிக்க டாலரில் 1,06,250க்கு அடையாளம் தெரிவிக்க விரும்பாத ஒருவரால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது..    இந்திய மதிப்பில் இது சுமார் 68 லட்சம் ரூபாய் ஆகும்