த்ரிஷா இல்லேன்னா கனிகா!

வருண்மணியன் – கனிகா

பிரபல நடிகை த்ரிஷாவின் முன்னாள் காதலர் வருண்மணியன். இவர் ரேடியன் கன்ஸ்ட்ரக்சன் என்ற பிரபல கட்டுமான நிறுவனத்தின் அதிபர் ஆவார்.

ஒரு கட்டத்தில் இவருக்கும் பிரபல நடிகை த்ரிஷாவுக்கும் அறிமுகம் ஏற்பட.. அது காதலாக மலர்ந்தது. முன்னதாக நடிகர் ராணாவை காதலித்து, தோல்வி கண்ட த்ரிஷாவுக்கு வருண் மணியன் ஆறுதலாக இருந்தார்.

 

இந்த நிலையில் வருண் மணியன் திரைத்துறையிலும் நுழைந்தார். ரேடியன் மீடியா சார்பில் ‘வாயை மூடி பேசவும்’, ‘காவியத்தலைவன்’ போன்ற படங்களைத் தயாரித்தார்.

த்ரிஷாவுடன் வருண்மணியன்

இதற்கிடையே வருண் மணியனுக்கும் த்ரிஷாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.  ஆனால் திடீரென இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படவே, அந்த திருணம் தடைபட்டுவிட்டது.

இந்த நிலையில் வருண் மணியன், கனிகா குமரன் என்பவரை காதலிப்பதாகவும், அடுத்தமாதம் இருவருக்கும் திருணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கனிகா குமரன் மறைந்த தமிழக முன்னாள் அமைச்சரும், “தினகரன்” நாளிதழின் நிறுவனர் கே.பி. கந்தசாமியின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.