சென்னை: தமிழக தலைநகரின் முதியோர் இல்லம் ஒன்றில் தங்கியுள்ள வயதான சிலர், கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த கதை, பிறருக்கு தன்னம்பிக்கை அளிப்பதாய் உள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் மொத்தம் 42 பேர் தங்கியுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் மத்திய & மாநில அரசுப் பணிகளிலிருந்து ஓய்வு பெற்றவர்கள்.
இந்நிலையில், இங்கு தங்கியுள்ள 9 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்களில் இருவர் 90 வயதிற்கு மேற்பட்டவர்கள், ஒருவர் 80 வயதிற்கு மேற்பட்டவர், ஐந்து பேர் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒருவர் 50 வயதிற்கு மேற்பட்டவர்.
ஆனால், இவர்கள் அனைவருமே கொரோனா பாதிப்பிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளனர் என்ற செய்தி பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. ஏனெனில், 65 வயதிற்கும் மேற்பட்டவர்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து மீள்வது எளிதல்ல என்று பொதுவாக கூறப்படுகிறது.
ஆனால், இந்த முதியோர் இல்லத்தில் நடந்திருப்பதோ அதிசயத்தைக் கிளப்பியுள்ளது. இதற்கு காரணம் அவர்களின் தளராத தன்னம்பிக்கை மற்றும் உற்சாகம்தான் என்று கூறப்படுகிறது.
எந்த வயதாக இருந்தாலும், இந்த நெருக்கடியான காலக்கட்டத்தில், தைரியமும் தன்னம்பிக்கையும் மிகவும் அவசியம். அவை நம்மிடம் இருந்தால், நம்மால் கொரோனாவை எளிதாக வெல்ல முடியும் என்பது பாடமாக காட்டியுள்ளனர் அந்த முதியவர்கள்!