கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட ஈரோடு முதியவர் பலி…

ஈரோடு:

டல்நலம் பாதிப்பு காரணமாக ஈரோடு  மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப் பட்ட ஈரோடு பகுதியைச் சேர்ந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மூச்சு திணறல் காரணமாக கடந்த வாரம் 60வயது முதியவர்  ஈரோடு அரசு தலைமை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு கொரோனா தொற்றாக இருக்கலாம் என சந்தேகித்து, கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வந்தனர்.இந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து கூறிய அரசு மருத்துவர்கள், அவரின் கொரோனா ரத்த பரிசோதனை முடிவு இன்னும் வரவில்லை என்றும், அவருக்கு ஏற்கனவே சர்க்கரை, மூளை நரம்பு பாதிப்பு போன்ற பிரச்சனை இருந்ததாக தெரிவித்துள்ளனர்.

முதியவர் மரணத்தைத் தொடர்ந்து, அவர் வசித்து வந்த பெருந்துறை பகுதியில் 1 கிமீ சுற்றுக்கு வீதிகளை அடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. .

You may have missed