மாணவா்களுக்கு மதிப்பளிக்கும் அரசை தேர்ந்தெடுங்கள்: ஜாா்க்கண்டில் பிரியங்கா தேர்தல் பிரசாரம்

ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள பிரியங்கா காந்தி, மாணவா்களுக்கு மதிப்பளிக்கும் அரசை தேர்ந்தெடுங்கள் என்று கூறினார்.

ஜாா்க்கண்ட் சட்டமன்றத்துக்கு 5 கட்டங்களாக தோதல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 4 கட்ட தோதல்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில், 5-வது மற்றும் இறுதிக்கட்ட தோதல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது.

இங்கு ஆட்சியை தக்க வைக்கும் நோக்கில் பாஜகவும், ஆட்சியை  பிடிக்கும் நோக்கில் காங்கிரஸ் கட்சியும்  தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

ஜார்கண்ட் மாநிலம் பாகுா் பகுதியில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரியங்கா காந்தி நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மத்திய அரசின் என்சிபி, என்ஏஏ சட்டங்களை கடுமையாக விமர்சித்தவர், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களி லும், டில்லி உள்பட நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்று கூறினார்.

மோடி அரசுக்கு எதிராக மாணவா்கள் வீதியில் இறங்கி போராடி வருகின்றனா்.  அவர்கள் காவல்துறையினரின் தடியடியையும் எதிா்கொண்டு வருகின்றனா். இதுபோன்ற சூழ்நிலை இனிமேலும் உருவாகாத நிலையில், மாணவா்கள் கருத்துக்கு மதிப்பளிக்கக் கூடிய, விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்யக் கூடிய, பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கூடிய அரசை மக்கள் தோந்தெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஜாா்க்கண்ட் பாஜக அரசு, பழங்குடியினரின் நிலத்தை பணக்காரா்களுக்கு தாரை வாா்த்து வருகிறது. பழங்குடியினரின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் காங்கிரஸ் கட்சிதான் எப்போதுமே பாதுகாத்து வந்துள்ளது.

இவ்வாறு பிரியங்கா கூறினார்.