கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் அமீத்ஷா பேரணியில் கலவரம் ஏற்பட்டதால், ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் வரும் 19-ம் தேதி இறுதிகட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அன்றைய தினம் 9 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறும்.

நேற்று இரவு கொல்கத்தாவில் பாஜக தேசிய தலைவர் அமீத்ஷா பேரணியில் தாக்குதல் நடைபெற்றது.

இதையடுத்து, அம் மாநிலத்தைச் சேர்ந்த சீர்திருத்தவாதி ஈஸ்வர் சந்திரா வித்யாசாகரின் சிலை உடைக்கப்படதற்கு கண்டனம் தெரிவித்து திரிணாமூல், மார்க்சிஸட் கம்யூனிஸ்ட் தொண்டர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என பாஜக, திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதனை கருத்தில் ஒரு நாள் முன்னதாக தேர்தல் பிரச்சாரத்தை முடிக்குமாறு மேற்கு வங்க தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்க அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாளை இரவு 10 மணியிலிருந்து யாரும் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் 7-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு வரும் 17-ம் தேதியுடன் முடிகிறது.மேற்கு வங்கத்தில் மட்டும் ஒரு நாள் முன்னதாக 16-ம் தேதியுடன் பிரச்சாரம் முடிகிறது.

தேர்தல் ஆணையத்துக்கு வழங்கப்பட்டுள்ள 324-வது சட்டப்பிரிவை பயன்படுத்தி இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.