தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கியது தேர்தல்ஆணையம்

சென்னை:

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்க முடியாது என்று தெரிவித்துவிட்ட, தேர்தல் ஆணையம் தற்போது, தமாகாவுக்கு ‘சைக்கிளுக்கு பதில் ஆட்டோரிக்‌ஷா’ ஒதுக்கி உள்ளது.

இதன் காரணமாக அதிமுக கூட்டணியில் தஞ்சாவூர் தொகுதியில் போட்டியிடும் தமாகா, சுயேச்சை சின்னமாக ஆட்டோ ரிரிக்‌ஷா சின்னத்தில் களமிறங்குகிறது.

கூட்டணி தலைமை கட்சியான அதிமுக, தமாகாவை இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி வந்த நிலையில், தமாகா தனது தனித்தன்மையை விட்டுக்கொடுக்க மறுத்து விட்டது.

அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலில்  தமாகா  2 தொகுதிகளில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிமுக தலைமை ஒரு தொகுதி மட்டுமே வழங்கியது. இதன் காரணமாக, தமாகாவுக்கு வழங்கப்பட்ட சைக்கிள் சின்னம் பறிபோனது. இதையடுத்து சுயேச்சை சின்னத்தில் தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.

இதையடுத்து, சைக்கிள் சின்னம் ஒதுக்க உத்தரவிடக்கோரி, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால், விசாரணையின்போது,  தேர்தல்ஆணையம் பதிலை ஏற்ற நீதிமன்றம், தமாகா கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டது.

இந்த நிலையில், தமாகா சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் சூழல் உருவானது. அதன்படி த.மா.காவுக்கு ஆட்டோ ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் தொகுதியில் தமாகா சார்பில் என்.ஆர்.நடராஜன், ஆட்டோ ரிக்‌ஷா சின்னத்தில் போட்டியிடுகிறார்.‘

Leave a Reply

Your email address will not be published.