சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக வி.கே. சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்று எதிர் அணியினர் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு ஆதாரமாக, தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள ஒரு பட்டியலை கூறுகிறார்கள்.

இந்திய தேர்தல் ஆணையம், வரும் 12ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்புவிடுத்திருக்கிறது.   அந்த கூட்டத்தில் தேர்தல் சீர்திருத்தம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீதான புகார்கள் குறித்து  ஆலோசிக்க உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கும், தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பியுள்ளது. இந்த பட்டியலில், அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் என்ற இடத்தில், பெயர் குறிப்பிடப்படவில்லை. கட்சியியலிருந்து தகவல் வர வேண்டியுள்ளது என்று மட்டும் குறிப்பிட்டுள்ளது.

இதையடுத்து ஓ.பி.எஸ். அணி ஆதரவாளர்கள் “அதிமுக  பொதுச்செயலாளராக சசிகலாவை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகியுள்ளது” என்று பேசத்துவங்கியிருக்கிறார்கள்.

அதே நேரம் சசிகலா தரப்பினர், “தற்போது தேர்தல் ஆணையம் அதிமுக என்ற வார்த்தையையே பயன்படுத்தக்கூடாது, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டிருக்கிறது.  தற்போது அதிமுக அம்மா, அதிமுக புரட்சிதலைவி அம்மா ஆகிய இரு அணிகளே உள்ளன. ஆகவேதான் தேர்தல் ஆணையம், தனது பட்டியலில் அதிமுகவுக்கு பொதுச்செயலாளர் யார் என்பதைக் குறிப்பிடவில்லை. விரைவில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தான் என்று தேர்தல் ஆணையம் அறிவிக்கும்” என்று பதில் அளித்து வருகிறார்கள்.

 

வார்த்தையை அந்த இடத்தில் பயன்படுத்தியுள்ளது தேர்தல் ஆணையம். சசிகலாதான் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்ற முறையில் உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். ஆனால், அந்த நியமனம் செல்லாது என்று, பன்னீர்செல்வம் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு செய்துள்ளது. இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்த நிலையில், தேர்தல் ஆணையம், அதிமுகவின் பொதுச்செயலாளர் யார் என்ற தகவலை வெளியிடவில்லை. தேர்தல் ஆணையத்தின் இந்த பட்டியல், சசிகலா ஆதரவாளர்கள் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.