டெல்லி: புதிய கட்சிகள் தொடங்க, தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்து  30 நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலையில் அதனை 7 நாளாக குறைத்தது இந்திய தேர்தல் ஆணையம்  உத்தரவிட்டு உள்ளது. இந்த புதிய உத்தரவு,  தமிழகம், புதுச்சேரி, கேரளா,  அஸ்ஸாம், மேற்கு வங்க மாநிலங்களுக்கும்  பொருந்தும் எனவும் விளக்கம் தெரிவித்துள்ளது.
கட்சியாக விரும்பும் ஒரு குழு,அமைப்பு,கழகம் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்- 1988 தொடங்கியபோது நிகழ் நிலையில் இருப்பின், தொடங்கியதில் இருந்து 60 நாட்களுக்குள்ளும், அந்தக் குழு, இந்த மக்கள் பிரதிதித்துவச் சட்டம் இதன் தொடக்கத்திற்கு பின்ஆரம்பிக்கப்பட்டிருந்தால் அமைக்கப்பட்ட தேதியின் பின்னிட்டு 30 நாட்களுக்குள் விண்ணப்பம்செய்யப்படுதல் வேண்டும்.
அந்த விண்ணப்பத்தில், விண்ணப்பித்த கழகத்தின் தலைமைச் செயல் அலுவலர், செயலாளர், கையொப்பமிட வேண்டும், அந்தக் கையெழுத்தானது தேர்தல் ஆணையத்தின் செயலருக்கு முன்நிகழ வேண்டும், அல்லது செயலருக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பப்படுதல் வேண்டும். மேலும்,  கட்சியின் விதிகள், விதிகளின் விவரக் குறிப்புகள், இவை எல்லாம் போக, அந்தக் கழகம்/கட்சி/அமைப்பு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நம்பிக்கைகொண்டிருக்கிறது என்றும், சமூகப் பொதுவுடமை, மதச் சார்பின்மை மற்றும் ஜனநாயகம்இவற்றின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றது எனவும், இந்தியாவின் ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாக்க கருத்தும் கொண்டிருக்க வேண்டும்.
தற்போது இந்த 30 நாட்கள் கால அவகாசத்தை 7 நாட்களாக குறைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. மேலும் தேர்தல் நடைபெற உள்ள 5 மாநிலங்களிலும், இந்த புதிய நடைமுறை 26-02-2021க்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களுக்கு பொருந்தும் என்று தெரிவித்து உள்ளது. மேலும், இது தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனை இருந்தால்,  இன்று மாலை  5.30 மணிக்குள் அல்லது ஏற்கனவே வழங்கப்பட்ட 30 நாட்களுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.