ஜனவரி 28ல் திருவாரூர் தேர்தல்: ஜன.21ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகுமாம்…

சென்னை:

திருவாருர் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஜனவரி 28ந்தேதி நடைபெற உள்ள நிலையில் ஜனவரி 21ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தேர்தல் கமிஷன் தெரிவித்து உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4ந்தேதி வெளியிடப்படும் என கடந்த ஆண்டு செப்டம் மாதம் வரை வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது  தேர்தல் ஆணையம் அறிவித்தது. ஆனால், குறிப்பிட்டபடி ஜனவரி 4ந்தேதி இறுதிப்பட்டியல் வெளியாகவில்லை. மேலும் பல திருத்தங்கள், பெயர் நீக்கம் போன்றவை செய்ய வேண்டியது இருப்பதால் மேலும் கால அவகாசம் தேவை என  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்தார்.

இந்த நிலையில் ஜனவரி 21ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி வரும் 28ந்தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஆனால், தேர்தல் ஆணையமோ வரும் 21ந்தேதிதான் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.

21ந்தேதி வெளியிடப்படும் இறுதி வாக்காளர் பட்டியலில் வாக்காளர்கள் பெயர் விடுபட்டிருந் தாலோ, பிழை இருந்தாலோ மீண்டும் மனு அளித்து சரி செய்ய கால அவகாசம் நேரிடும். ஆனால்,  அதற்கு அவகாசம் கொடுக்காமல், தேர்தல் வாக்குப்பதிவுக்கு ஒரு வாரம் முன்புதான் இறுதி பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

ஒருவேளை இறுதிப்பட்டியலில்  வாக்காளர்கள் பெயர் ஏதேனும் தவறு காரணமாக பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலோ, முகவரி மாற்றம் போன்ற  காரணங்களால்  விடுபட்டிருந்தாலோ, அவர்கள் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். இது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chief Election Officer Satya Prata Sahu, final electoral roll, Final Voters List on January 21, Tamil Nadu: Election Commissioner, tamilnadu, இறுதி வாக்காளர் பட்டியல், சத்யபிரதா சாகு, ஜன.21ல் வெளியீடு, தமிழக தேர்தல் ஆணையர், தமிழ்நாடு
-=-