டில்லி,

நாடு முழுவதும் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 16ந்தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மாநிலங்களவையில் தற்போது 5 உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, காலியாக உள்ள டெல்லி, உத்திரபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் இருந்து மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

 

தேர்தல் வாக்குப்பதிவு,  டெல்லி, உத்திரபிரதேசம், சிக்கிம் சட்டப்பேரவை வளாகத்தில் காலை 9 மணி முதல் 4 மணி வரை தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலை அந்தந்த மாநில தேர்தல் அதிகாரியின் கண்காணிப்பில் நடைபெறும்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டப்பேரவையில் உள்ள எம்எல்ஏக்கள் மூலமே தேர்வு செய்யப்படு கின்றனர். அந்தந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொருத்தே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

எந்த கட்சி அதிக சட்டமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளதோ, அந்த கட்சியின் உறுப்பினரே மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்.