தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் அதிகாரிகள் மெத்தனம்! சேலம் எம்.பி. பார்த்திபன் கோபம்

சேலம்:

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாவட்டத்தில், ஊரகப்பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில்,  தேர்தல் முடிவுகளை அறிவிக்காமல் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர்.

இதற்கு சேலம் மாவட்ட எம்.பி. பார்த்திபன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.

ஊரகப்பகுதிகளில் நடைபெற்ற தேர்தல் வாக்கு எண்ணிகை நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலையில் வகித்து வருகிறது. அதுபோல, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சொந்த மாவட்டமான சேலத்திலும் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தேர்தல் அதிகாரிகள் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் மெத்தனம் காட்டி வருவதாகவும், முடிவுகளை அறிவிக்காமல் உள்ளதாகவும் சேலம் மாவட்ட எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.