சாதியும் தேர்தல் முடிவுகளும்..

மூத்த பத்திரிகையாளர் சுகுணா திவாகர் (Suguna Diwakar) அவர்களது முகநூல் பதிவு 

download (1)

சாதியத்தை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்பவர்களில் கருணாஸையும் தனியரசையும் தவிர அத்தனை பேரும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். இருவர் வெற்றி பெற்றதற்கும் காரணம்கூட அ.தி.மு.க.வின் செல்வாக்கால்தான். இந்த சாதித் தலைவர்களுக்கு எப்போதுமே பெரியளவில் அந்த சாதிக்காரர்களின் ஆதரவுகூட இல்லை என்பது மற்றொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. முருகையா பாண்டியன் போன்று ஒருகாலத்தில் பிம்பமாக ஊதிப் பெரிதாக்கப்பட்டவர்கள் எல்லாம் இருக்கும் இடமே தெரியவில்லை.

மக்களுக்கு சாதியுணர்வு இருப்பது எதார்த்தம் என்றாலும் அதுமட்டுமே தேர்தல், வெற்றி தோல்விகளை நிர்ணயிப்பதற்குப் போதுமானதில்லை. ஆனாலும் இருக்கும் கொஞ்சநஞ்ச ஆதரவை மிகைப்படுத்தி, தங்களுக்குத் தாங்களே ஊதிப் பெரிதாக்கிக்கொள்ளும் சாதியத் தலைவர்கள்தான் அதிகம். தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தேவையே இல்லாமல் இவர்களுக்கான இடம் கொடுப்பது மட்டும்தான் இவர்கள் கொஞ்சநஞ்சம் பிழைத்திருப்பதற்குக் காரணம். இவர்கள் வளர்வது அ.தி.மு.க, தி.மு.க.வுக்கே கூட நல்லதில்லை என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்களா?