மும்பை,

குஜராத் சட்டமன்ற தேர்தல் களத்தில் பாஜகவை எதிர்த்து தீவிர  பிரச்சாரம் செய்து போட்டியை எதிர்கொண்ட ராகுல் காந்தி வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வதாக பாஜ ஆதரவு கட்சியான  சிவசேனா தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழான சாம்னாவில் தலையங்கம் எழுதப்பட்டுள்ளது.

அதில், நாட்டில் மிக இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தி பதவி ஏற்றி ருக்கிறார்.  அவர் தேர்தல் முடிவுகளைப் பற்றி கவலை கொள்ளாமல், குஜராத் சட்டமன்ற தேர்தலில் பாஜக வை எதித்து கடுமையான பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில், ராகுலை வாழ்த்துவதில் தயக்கம் செய்யககூடாது என்று கூறி உள்ளது.

மேலும்,. பாஜகவை கடுமையாக சாடியுள்ள சிவசேனா, “கடந்த 60 ஆண்டுகளாக  நாட்டில்  எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும்,  கடைசி மூன்று ஆண்டுகளாகத்தான் எல்லாமே நடைபெற்றிருக்கிறது  என கருதுபவர்கள் மனிதர்களா அல்லது மூடர்களா? என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும்,  இந்தியாவுக்கு கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே சுதந்திரம் கிடைத்தது என்றுகூட பாஜக சொல்லலாம் என்றும், ,150 ஆண்டு கால சுதந்திரப் போராட்டம்கூட பொய் என்று சொல்லலாம்” என விமர்சித்துள்ளது.
குஜராத்தில் பாஜக தோல்வி பயத்திலேயே இருந்ததாகவும், அதன் காரணமாகவே மோடி அடிக்கடி வந்து பிரசாரம் மேற்கொண்டதாகவும், அந்த நிலையிலும், ராகுல் மேற்கொண்ட பிரச்சாரம் பாராட்டுதலுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளது.

ராகுலின்  நம்பிக்கையே அவரை முன்னெடுத்துச் செல்லும். இருந்தாலும்,  காங்கிரஸ் கட்சியை வெற்றியின் சிகரத்துக்கு அழைத்துச் செல்வதா அல்லது அதை பாதாளத்துக்கு அழைத்துச்  செல்வதா என்பதையும் ராகுல் காந்தியே முடிவு செய்ய வேண்டும்”

இவ்வாறு அதில் எழுதப்பட்டு உள்ளது.