தோல்வி முகம் – டொனால்ட் டிரம்ப்பிற்கு ஆலோசகர்கள் கூறியது என்ன?

வாஷிங்டன்: ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்’ என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதிவிட்டது சரியானதல்ல என்று அவரின் மூத்த ஆலோசகர்கள் ஆலோசனை கூறியுள்ளதாய் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 3ம் தேதி நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இன்னும் இழுபறி நிலவுகிறது. இதற்கு காரணம், அந்த எண்ணிக்கையை எதிர்த்து பல மாகாணங்களில் டொனால்ட் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் வழக்குத் தொடர்ந்துள்ளதுதான்.

இந்நிலையில், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்’ என்ற டிவிட்டரில் டிரம்ப் பதிவிட்டுள்ளதானது, அவரின் தோல்வியை ஒப்புக்கொண்டதாகிவிடும் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அவரின் ஆலோசகர்கள்.

அதாவது ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்’ என்பது விஷயத்தை சரியாக விளக்குவதாக இல்லையென்றும், இதற்கு பதிலாக ‘மோசடியை நிறுத்தவும்’ என்றே பதிவிட்டிருக்க வேண்டுமென்று ஆலோசனை கூறியுள்ளனர் அவர்கள்.

மேலும், ‘வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவும்’ என்று பொத்தாம் பொதுவாக பதிவிட்டால், அது அன‍ைத்து மாநிலங்களிலும் எண்ணிக்கையை நிறுத்தி, ஜோ பைடனின் வெற்றிக்கு வழிவகுத்துவிடும்.

எனவே, ‘மோசடியை நிறுத்தவும்’ என்று பதிவிட்டால், அது தெளிவான செய்தியாக இருக்குமென்று ஆலோசகர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.