மிசோரம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் வாக்குப் பதிவு தொடங்கியது

--

போபால்

மிசோரம் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தல்கள் வாக்குப்பதிவு தொடங்கிஉள்ளது.

இன்று மத்தியப் பிரதேச மாநிலத்திலும் மிசோரம் மாநிலத்திலும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் மத்தியப் பிரதேசத்தில் 230 தொகுதிகள் உள்ளன. மிசோரம் மாநிலத்டில் 4 தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

இதில் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 3 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. அங்கு வாக்குப் பதிவு மாலை 4 மணிக்கு முடிவடையும். மற்ற தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைய உள்ளது. மிசோரம் மாநிலத்தில் அனைத்து தொகுதிகளுக்கும் காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி உள்ளது.

இன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை வரும் 11 ஆம் தேதி நடைபெற உள்ளது.