தேர்தலில் வெற்றி: கருணாநிதி நினைவிடத்தில் கதிர் ஆனந்த் மரியாதை!

சென்னை:

வேலூர் மக்களவைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த். இன்று சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அவருடன் தி.மு.க தலைவர் மு க ஸ்டாலின் திமுக பொருளாளர் துரைமுருகன் உள்பட கட்சித் தலைவர்களும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

வேலூர் மக்களவை தொகுதியில் கடந்த 5ந்தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில்,நேற்று வாக்கு எண்கிக்கை நடைபெற்றது.  இதில், 8,141வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றிக்கு திமுக கூட்டணி கட்சிகள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், இன்று சென்னை வந்த கதிர் ஆனந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றுடன் அத்துடன், திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியின் மெரினா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.