நான்குநேரி மற்றும் விக்கிரவாண்டி  தொகுதி தேர்தல் பணிகள் மும்முரம்

விக்கிரவாண்டி

ட்டப்பேரவை இடைத்தேர்தலையொட்டி விக்கிரவாண்டி மற்றும் நான்குநேரி தொகுதிகளில் தேர்தல் பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது.

நாளை தமிழக சட்டப்பேரவை இடைத் தேர்தல் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி  தொகுதியில் நடைபெற உள்ளது.  நேற்றுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்துள்ளது.   இந்த இரு தொகுதிகளிலும் தற்போது தேர்தலுக்கான பணிகளைத் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மும்முரமாகச் செய்து வருகின்றனர்.

இந்த இரு தொகுதிகளுக்குமான வாக்குப்பதிவு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடைபெற உள்ளன.  அதையொட்டி அதற்கான இயந்திரங்களை வாக்குச்சாவடிக்கு அனுப்பும் பணிகள் நடந்து வருகின்றன.  தீவிர பாதுகாப்புடன் இந்த வாக்கு இயந்திரங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன.

விக்கிரவாண்டி தொகுதியில் 61 வாக்குச் சாவடிகள் பதட்டமானதாகக் கருதப்படுகின்றன.  இந்த வாக்குச் சாவடிகளில் காவல்துறை ஆய்வாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.  எனவே வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் எனக் கடலூர் ஆட்சியர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.