டில்லி:

17வது மக்களவையை கட்டமைப்பதற்கான கடைசி கட்ட தேர்தல் நாளை மறுதினம் நடைபெற உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

இந்த நிலையில், டில்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, மோடி ஆட்சியின் அவலத்தை தோலுரித்து காட்டினார்.

பணத்திற்கும், உண்மைக்கும் இடையே நடைபெற்ற தேர்தல் இது என்று கூறிய ராகுல்காந்தி, பிரதமர் மோடி  கறைபடியாத கரம் கொண்டவர் மோடி என்று கூறியதை,  தவறு என்று நாங்கள் மக்களிடையே அம்பலப்படுத்தி உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

தேர்தல் முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மோடி முதன்முறையாக செய்தியாளர் களைச் சந்திக்கிறார். அவரது செய்தியாளர்கள் சந்திப்பை நான் பாராட்டுகிறேன் என கூறியவர்,  பிரதமர் மோடி பல்வேறு விவகாரங்களில் வெளிப்படையாக பதில் அளிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

தேர்தலில் மோடியும் அமித்ஷாவும்  மிகப்பெரிய அளவில் பணத்தை  செலவு செய்து உள்ளனர். ஆனால்,  மக்களின் முடிவே எங்களின் முடிவாக இருக்கும். பாஜகவிடம் உள்ள பணத்திற்கும் எங்கள் பக்கம் உள்ள உண்மைக்கும் தான் இந்த தேர்தலில் போட்டி.

இந்த தேர்தலில் நாங்கள் கேரளா, மேற்குவங்கம் போன்ற இடங்களில் கூட்டணி அமைக்க வில்லை. எனினும் மதச்சார்பற்ற கூட்டணியே வெற்றி பெறவுள்ளது. காங்கிரஸ் கட்சியின் குறிக்கோளாக இருந்தது,

பிரதமர் மோடியின் அனைத்து கதவுகளையும் அடைக்க வேண்டும் என்பது தான். நாங்கள் அதை 99 சதவீதம் நிறைவேற்றியுள்ளோம். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம், அதில் 90 சதவீத கதவை நாங்கள் அடைத்தால் மீதமுள்ள 10 சதவீத கதவுகளை மோடியே எங்களுக்காக அடைத்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.