டெல்லி:

டெல்லி சட்டமன்றத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது. அதன்படி, அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லி சட்டமன்றத்தின் தற்போதைய பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 22-ந்தேதியுடன் நிறைவு பெறுகிறது. அதற்கு முன்னதாக தேர்தல் நடைபெற்று புதிய ஆட்சி ஏற்படுத்தப்பட வேண்டும்.  இந்த நிலையில், இதையடுத்து டெல்லி மாநில சட்டசபை தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், டெல்லி சட்டமன்ற தேர்தல் மற்றும்,  பள்ளி-கல்லூரிகளுக்கு இறுதி ஆண்டு தேர்வு  குறித்தும் விவாதிக்கப்பட்டது.  இதன் காரணமாக டெல்லிக்கு ஜனவரி கடைசி வாரம் அல்லது  பிப்ரவரி முதல்வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் தற்போது, முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது.