தேர்தல் பத்திரங்கள் வாங்குவதில் கறுப்புப் பணம் பயன்படுத்தப்படவில்லை என்று எப்படித் தெரிந்து கொள்ள முடியும்! ஓ.பி. ராவத் கேள்வி

டில்லி:

தேர்தல் பத்திரங்கள் குறித்த தேர்தல் ஆணையத்தின் எந்த ஒரு சந்தேகங்களுக்கும் அரசாங்கம் முறையாக பதிலளிக்கவில்லை, என தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி. ராவத் ‘தி எகனாமிக் டைம்ஸ்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். வரும் டிசம்பர் முதல் வாரத்தில் ராவத்தின் பதவி காலம் முடிவடைகிறது.

தேர்தல் பத்திரங்கள் என்பது அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க விரும்பும் தொழில் நிறுவனங்களும், தனிநபர்களும், குறிப்பிட்ட சில பாரத ஸ்டேட் வங்கிக் கிளைகளில் கிடைக்கும் தேர்தல் நிதிப் பத்திரங்களை வாங்கி, அதன் மூலம் வங்கிகள் வழியாக, வெளிப்படையாக நன்கொடை அளிக்க முடியும். பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிடப்படுகிறதோ, அந்த தொகை, குறிப்பிட்டுள்ள அரசியல் கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

அரசியல் கட்சிகளுக்கு ரொக்கமாக நன்கொடை அளிப்பதை தவிர்க்க, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2017-ல் தனது வரவுசெலவுத் திட்டத்தில் இந்த புதிய முறையை அறிவித்துள்ளார். பாரத ஸ்டேட் வங்கி இந்த ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து பத்திரங்களை விற்க ஆரம்பித்தது.

எனினும், வாடிக்கையாளர் விவரங்களை அளித்த பிறகு இந்தப் பத்திரங்களை வாங்க முடியும் என்பது வங்கி விதிமுறை. ஆனால், பத்திரத்தில் வாங்கியவரின் பெயர் இடம்பெறாது என்பதால் ரகசிய காப்பு பற்றி பயப்பட தேவையில்லை. மேலும், நன்கொடை அளித்தவரின் வங்கிக் கணக்கில் இந்த விவரங்கள் தவறாமல் இடம் பெறும்.

தேர்தல் நிதிப் பாத்திரங்கள், நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 7.5% கட்டுப்பாட்டை தளர்த்தி உள்ளது. அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையை வழங்க நிறுவனங்கள் குறைந்தது மூன்று ஆண்டுகளாவது செயல்பட்டிருக்க வேண்டும் என்ற விதிமுறையும் அகற்றப்பட்டுள்ளது. நஷ்டத்தில் இயங்கும் நிறுவனம் கூட இனி அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும். இதன் மூலம் நிழல் மற்றும் போலி நிறுவனங்களும் தங்களை அடையாளம் காட்டாமல் எத்தனை கொடிகள் வேண்டுமானாலும் அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்க முடியும்.

மேலும், ராவத் கூறுகையில், “அரசியல் கட்சிகளின் நன்கொடை விவரங்கள் மற்றும் தணிக்கை செய்யப்பட்ட அறிக்கைகள் எங்களுக்கு கிடைத்துள்ளன, நாங்கள் அவற்றை மதிப்பீடு செய்து அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவோம்,” என்றார்.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் குறித்த விமர்சனங்களைப் பற்றி கேட்டபோது, ராவத், “சந்தேகத்திற்கிடமான பேச்சு மற்றும் அதிகாரிகளின் கவனக்குறைவான நடத்தையும்” சந்தேகங்களை உருவாக்கியதாக அவர் கூறினார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Chief Election Commissioner OP Rawat, EC தலைவர் ஓ.பி. ராவத் கேள்வி, Electoral bond, தேர்தல் பத்திரங்கள், தேர்தல் பத்திரங்கள்: கறுப்புப் பணம் பயன்படுத்தப்படவில்லை என்று எப்படித் தெரிந்து கொள்ள முடியும்
-=-