தேர்தல் நிதி பத்திரம்… தவறான தகவல் கொடுத்த பொன்.ராதாகிருஷ்ணன்!

புதுடெல்லி:  மத்திய நிதி அமைச்சகம் தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் அரசுக்கு கொடுக்கவில்லை என கூறியுள்ளது.

கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடந்த ராஜ்யசபா கூட்டத்தில், நிதி அமைச்சகம்   தேர்தல் நிதி பத்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் எந்த தகவலையும் அரசுக்கு கொடுக்கவில்லை என கூறியுள்ளது. முகம்மது நடிமுள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  பதிலளிக்கையில், நவம்பர் 2018 வரை தேர்தல் நிதி பத்திரம் 1,056.73 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது. அதில், 1,045.53 கோடி ரூபாய் பல்வேறு கட்சிகளுக்கு  விற்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

 

ஆனால், பொன்.ராதாகிருஷ்ணனின் இந்த பதில் தவறானது என்று லோகேஷ் கே.பத்ரா என்னும் சமூக ஆர்வலர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் மத்திய அரசுக்குமிடையே நடந்த தொடர்புகளை பத்ரா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றுள்ளார்.  இப்போது இந்த விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.