சென்னை

மிழகத்தில் மின்சார பேருந்துகளை கொள்முதல் செய்ய இங்கிலாந்து நிறுவனத்துடன் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

சுற்றுச்சூழல் மாசுபடுவதைக் குறைக்க உலகெங்கும் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.    அவ்வகையில் டீசலில் இயங்கும் பேருந்துகளுக்கு பதில் மின்சார பேருந்துகள் இயக்க சுற்றுச் சூழல் துறை பரிந்துரை செய்துள்ளது.   தமிழக அரசு மின்சார பேருந்துகளை உபயோகிக்க திட்டம் இட்டுள்ளது.    தமிழக அரசு இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், “சுற்றுச் சூழல் மாசுபடுவதை தடுக்க உலக அளவில் 26 நாடுகள் மின்சார பேருந்துகளை இயக்கி வருகின்றன     அதில் பல்வேறு நாடுகளில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சி – 80 என்னும் நிறுவனம் இவ்வகை பேருந்துகளை அறிமுகப் படுத்தி உள்ளது.   அந்த நிறுவனத்தில் இருந்து மின்சார பேருந்துகள கொள்முதல் செய்ய அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது.

குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படும் இந்த பேருந்துகளால் சுற்றுச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படுவதுடன் புதிய தொழில் நுட்பங்களை அறிமுகப் படுத்துவதிலும் அரசு முன்னோடியாக திகழும்.  இந்த நிறுவனம் பேருந்துகளை அளிப்பதுடன் இதற்கான சாலை வரைபடம் தயாரித்தல்,  மின்சாரம் உட்பட உள் கட்டமைப்புகளை அமைத்தல் போன்ற சேவைகளையும் அளிக்கும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு – சி 80 நிறுவனம் இடையே ஒப்பந்தத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து இட்டுள்ளார்.    அப்போது அவருடன் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன்,  போக்குவரத்து துறை தலைமை செயலாளர் ஆகியோர் உடன் இருந்தனர்.