டாபா நகர், மகராஷ்டிரா

காராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தடாபா நகர் சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தை சுற்றிப் பார்க்க எலெக்டிரிக் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள வனவிலங்கு சரணாலயமான தடாபாநகர் சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் ஏராளமான புலி, சிங்கம் உள்ளிட்ட பலவகை விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த சரணாலயத்தை சுற்றிப் பார்க்க ஜீப் போன்ற வாகனங்கள் இருந்தன. இவற்றில் ஏறி பயணிகள் மிக அருகில் மிருகங்களை பார்க்க முடியும். இவ்வாறு பார்க்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தன.

ஜீப் உள்ளிட்ட வாகனங்களில் செல்லும் போது வாகனத்தில் அதிக சத்தம் உண்டாகி வ்ந்தது. அது மட்டுமின்றி வாகனப் புகையினால் காற்று மாசு படுதலும் அதிகரித்தது. பலரும் இயற்கை சூழலை ரசிக்க செல்லும் போது வாகனங்களின் சத்தம் மற்றும் புகையினால் பறவைகளும் விலங்குகளும் வாகனங்களின் ஒலியைக் கேட்டு ஓட்டம் பிடிக்க ஆரம்பித்தன.

இதை ஒட்டி மகிந்திரா எலெக்டிரிக் நிறுவனம் தங்கள் தயாரிப்பான எலெக்டிரிக் காரை இந்த சரணாலயத்துக்கு அளித்துள்ளது. இது குறித்து அந்நிறுவன தலைமை அதிகாரி மகேஷ்பாபு, “தற்போது விலங்குகள் எளிதாக சுவாசிக்கலாம். இந்தியாவின் முதல் எலெக்டிரிக் வன ஊர்தி மகராஷ்டிரா சரணாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய மகேந்திரா குழுவுக்கு நன்றி” என டிவிட்டரில் பதிந்துள்ளார்.

இந்த வாகனத்தில் ஓட்டுனர் மற்றும் வன அதிகாரியை தவிர ஆறு பேர் வரை செல்ல முடியும். இந்த வகை வாகனங்கள் வனப் பகுதி பயணத்துக்காக தயாரிக்கப்பட்டவை. இதனால் சத்தம் மற்றும் புகை அடியோடு நின்றுள்ளது.

 

போட்டோ உதவி : டிவிட்டர்