மின்சார ரயிலில்  தொங்கியபடி பயணம்:  உடல் துண்டாகி மூவர் பலி! 

சென்னை: 

சென்னையில் மின்சார ரயிலில் தொங்கியபடி பயணம் செய்த இளைஞர்கள் தவறி விழுந்த விபத்தில் 3 பேர் உடல் துண்டாகி உயிரிழந்துள்ளனர். 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

தாம்பரம் – கடற்கரை மார்க்கமாக செல்லும் ரயிலில் இன்று காலையில் இளைஞர்கள் சிலர் பரங்கிமலையில் ஏறினர்.

அவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். அப்போது ரயில் பழவந்தாங்கலை நெருங்கும்போது தவறிவிழுந்து படுகாயமடைந்தனர்.

அவர்களில் 2 பேர்  உடல் துண்டானது. மற்றொருவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற போது உயிரிழந்தார்.

இதே இடத்தில் பத்துக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்திருப்பதாக ரயில் பயணிகள் தெரிவித்தனர்.

விபத்து குறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

You may have missed