மின்சார ரெயில் படிக்கட்டு பயணம்: பரங்கிமலையில் 4 பேர் பலி

சென்னை:

சென்னை கடற்கரை  முதல் திருமால்பூர்  மின்சார ரெயிலில் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தபோது, மின் கம்பத்தில் மோதி விழுந்து 4 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை வழக்கம்போல சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் நோக்கி மின்சார விரைவு ரெயில் புறப்பட்டுச் சென்றது. இந்த ரெயிலில் ரெகுலராக வேலைக்கு செல்பவர்கள், பள்ளி,  கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் என  ஏராளமானோர் பயணம் செய்தனர். ரெயிலில் இருக்கை இல்லாமல் பலர் படிக்கட்டுகளில் தொங்கிகொண்டே சென்றனர்.

ரெயில் பரங்கிமலை ரெயில் நிலையம் அரு கே உள்ள எலக்ட்ரிக் கம்பத்தில் மோதி படிக்கட்டில் பயணம் செய்தவர்கள் கீழே விழுந்தனர். உடடினயாக ரெயில் நிறுத்தப்பட்டு, பலத்த காய மடைந்த அவர்கள்  மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களில் 4 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 10 பேர்  தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

நேற்றிரவும் பரங்கிமலையில், தடுப்பு சுவர் மோதி 2 பேர்  உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்தில் இறந்தவர்கள் யார் என்பது குறித்து ரெயில்வே காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.