விடுமுறை மறுப்பு: திண்டுக்கல் மின்வாரிய ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல்:

பெற்ற தாயின் நினைவு தின நாளுக்கு செல்ல விடுமுறை மறுக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் மின் வாரிய ஊழியர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகிலுள்ள ஆயக்குடி என்ற பகுதியில்  மின்வாரிய ஊழியராக பணியாற்றி வந்தவர் தனபால். இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டம். பணி நிமித்தமாக பழனியில்  தனி அறை எடுத்து தங்கி வேலை செய்து வருகிறார். அவரது தாய் கடந்த ஒராண்டுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இந்த நிலையில், தனது தாய் மறைந்து ஓராண்டாடு ஆன நிலையில், தாய்க்கு திதி கொடுக்க செல்வதாக 2 நாட்கள் விடுமுறை வேண்டும் என தனது உயர் அதிகாரிகளிடம் கேட்டிருந்தார். ஆனால், கஜா புயல் காரணமாக மின் கம்பங்கள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருவதால், தற்போது விடுமுறை தர இயலாது என்று உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

இதனால் மனம் உடைந்தன தனபபால், தனது அறை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் தனபாலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் கிடைக்கப்பெற்ற கடிதத்தில்,  தாயின் நினைவு தினத்திற்காக திதி கொடுக்க விடுப்பு அளிக்காததால், மன வேதனையில் தற்கொலை செய்து கொண்டதாக எழுதியுள்ளார்.

இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.