சினேகாவுக்கு ஷாக் அடித்த மின் கட்டணம்.. 70ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்லி பில்..

--

கொரோனா தடை காலத்தால் வீடுகளில் மின் கட்டண அளவு எடுப்பது கடந்த இரண்டு, மூன்று மாதமாக நடக்கவில்லை. சமீபத்தில் நடிகை சினேகாவுக்கு மின்கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்தது. அதைகண்டு அதிர்ச்சி அடைந்தார். வழக்கமாக வரும் கட்டணத்தைவிட இது மிக அதிகம்.

இதுதொடர்பாக மின்வாரியத்துக்கு புகார் செய்தார். மின் மீட்டரில் ஏதாவது தவறு ஏற்பட்டிருக்கலாம் அதை டெக்னீஷியன் வந்து சரிபார்ப்பார் என்று அதிகாரிகள் தெரித்திருக்கின்றனர்.
நடிகை சினேகா குறைந்த அளவிலான படங்களிலேயே நடிக்க ஒப்புக்கொள் கிறார். சமீபத்தில் தனுஷுடன் ’பட்டாஸ்’ படத்தில் நடிதார். தற்போது ’வான்’ என்ற படத்தில் நடிக்கிறார்.