மின்துறை அமைச்சரையே ஷாக்’கடிக்க வைத்த மின் கட்டணம்..

மின்துறை அமைச்சரையே ஷாக்’கடிக்க வைத்த மின் கட்டணம்..
ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட பின் , மின்சார வாரியத்தால் தரப்படும் மின் கட்டண ரசீது நுகர்வோருக்கு ‘ஷாக்’ அளித்து வருகிறது.
தனக்கு வழங்கப்பட்ட மின் கட்டண ரசீதைப் பார்த்து மின்சாரத்துறை அமைச்சரே விக்கித்து நின்ற சம்பவம் மே.வங்க மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்கு மின்சாரத்துறை அமைச்சராக இருப்பவர், சோவன் தேவ் சாட்டர்ஜி.
அவரது வீட்டுக்கு இந்த மாதம் கூடுதலாக மின் கட்டணம் வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
‘’ கடந்த 2 மாதங்களாக வீடுகளில் மின்சார மீட்டர் ’ரீடிங்’ எடுக்கப்பட வில்லை. எனது வீட்டுக்கு வழக்கமாக 7 ஆயிரம் ரூபாய் மின் கட்டண ரசீது வரும். இந்த மாதம் 11 ஆயிரம் மின்சார கட்டண ரசீது வந்தது. நான் ‘ஷாக்’’ அடித்துப்போனேன்’’ என்கிறார், அவர்.
ஆம்பன் புயல் ஏற்படுத்திய சேதம் மற்றும் ஊரடங்கு காரணமாக மே.வங்க மாநிலத்தில் கடந்த  2 மாதங்களாக மின்சார ஊழியர்கள் நேரில் சென்று மீட்டர் ரீடிங் எடுப்பதில்லை.
’கடந்த  6 மாதங்களுக்கான மின் நுகர்வைக் கணக்கிட்டுக் குத்து மதிப்பாக மின் கட்டண ரசீதை அனுப்புகிறோம்’. நிலைமை சீரடைந்த பின் இதனைச் சரி செய்து கொள்வோம்’ என்கிறார்கள், அங்குள்ள மின்சார வாரிய அதிகாரிகள்.
-பா.பாரதி