Random image

மின்சார தட்டுப்பாடு அபாயம்: 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது தமிழக அரசு

சென்னை:

மிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தின் பல இடங்களில் மின்வெட்டு நிலவி வருகிறது. இதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் சய்து வருகின்றன. இந்த நிலையில்,  தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, சில இடங்களில் காற்றாலை மின்சாரம் சரிவு காரணமாக  மின்வெட்டு ஏற்படுவதாகவும், தொடர் மின்வெட்டு இல்லை என்றும் கூறியிருந்தார்.

வழக்கமாக காற்றாலை மூலம் 8,255 மெகாவாட் மின்சாரம் பெறப்பட்டு வருகிறது. ஆனால் நேற்று காற்றாலை மூலம் கிடைக்கும் மின்சார அளவு மிகவும் குறைந்து விட்டது. அதாவது 100 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.

இந்த நிலையில் நிலக்கரி இறக்குமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர கோரிக்கை விடுத்திருந்தார். தற்போது, தமிழ்நாட்டில் மின் உற்பத்திக்கு 3 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே இருப்பு உள்ளது.

தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின் உற்பத்தி நிறுவனங்களில் தொடர்ந்து உற்பத்தி நடப்பதற்கு தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

எனவே தமிழக மின் உற்பத்திக்கு தேவையான தினமும் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரியை சப்ளை செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருந்தார். அதைத் தொடர்ந்து தமிழகத்தில்  மின் தட்டுப்பாடு வராமல் தடுக்க 30 லட்சம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

இதற்கான டெண்டர் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தமிழ்நாடு மின் வாரிய தகவல் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கடந்த 10 மற்றும் 11-ந்தேதி களில் காற்றாலை மூலம் பெறப்படும் மின்சாரத்தின் அளவு மிகவும் குறைந்து விட்டது. ஆண்டு பராமரிப்பு காரணமாக கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தம் மற்றும் வல்லூர் அனல் மின்நிலை யத்தில் உற்பத்தி நிறுத்தம் போன்ற காரணங்களால் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது தற்காலிகமானதுதான். இது முன் எப்போதும் இல்லாத அளவு எதிர்பாராமல் நடந்தது. நிலைமை 3 நாளில் சீராகும் என  கூறினார்.