சென்னை:

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் முறையிலான கட்டணம் செலுத்தும் முறையின் கால அவகாசம் டிசம்பர் 15ந்தேதி வரை நீடித்து மத்திய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது.

நாளை முதல் (டிசம்பர் 1ந்தேதி) நாடு முழுவதும் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை களில், சுங்கக் கட்டணம் ஃபாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முறையில் செலுத்த வேண்டும் என்று மத்தியஅரசு அறிவித்திருந்தது. இதன் காரணமாக, சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் மிச்சமாகவும் வகையில்,  காலவிரயத்தை தவிர்க்கவும் இந்த திட்டம் செயல்படுத்தப் படுகிறது.

இதையடுத்து, சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் நடைமுறைப்படுத்தும் வகையில், அதற்கான ஸ்கேனர் கருவிகள் பொருத்தப்பட்டு வந்தன. ஆசனால், ஃபாஸ்டேக்  ஸ்டிக்கர்  பெறுவதிலும் சிக்கல்கள் நீடித்து வருகிறது. இதன் காரணமாக, நாளை முதல் ஃபாஸ்டேக்  நடைமுறைப் படுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஃபாஸ்டேக் நடைமுறைப்படுத்தும் கால அவகாசம் டிசம்பர் 15ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு தேசிய நெடுஞ்சாலைகள் வழியாக செல்லும் வாகனங்கள், சுங்கச் சாவடிகளில் கட்டணம் செலுத்த  பாஸ்ட்டேக் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.