‘ஃபாஸ்டேக்’ கால அவகாசம் ஜனவரி 15 வரை நீட்டிப்பு

சென்னை:

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில், ஃபாஸ்டேக் முறையிலான கட்டணம் செலுத்தும் முறைக் காக வாகன ஓட்டிகள்  ஃபாஸ்டேக் வாங்குவதற்கான  கால அவகாசம் மேலும் ஒரு மாதம் நீடிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜனவரி  15ந்தேதி வரை நீடித்து மத்திய போக்குவரத்துத் துறை உத்தரவிட்டு உள்ளது.

நாடு முழுவதும் நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை களில், சுங்கக் கட்டணம் வசூலிக் கும்போது ஏற்படும் காலதாமதத்தை தடுக்கும் வகையில்  ஃபாஸ்டேக் எனப்படும் டிஜிட்டல் முறையில் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்பட்டுஉள்ளது. இது 100 சதவிகிதம் முழுமையாக அமல்படுத்துவதாக மத்திய போக்குவரத்துத் துறை அறிவித்தது. அதற்கான இறுதி அவகாசம் டிசம்பர் 15வரை என்று அறிவித்திருந்த நிலையில், தற்போது மேலும் ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி உள்ளது. அதன்படி, ஜனவரி 15ந்தேதி வரை காலஅவகாசதை நீட்டித்து உள்ளது.