மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானதே! தேர்தல் ஆணையம்

டில்லி:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானதே என்று தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில் தெரிவித்து உள்ளது.

மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என கூறி உஙளளது.

2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் ஒப்புகை சீட்டுடன் பயன் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

 

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடப்பதாகவும் எனவே வாக்குச் சீட்டு முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும் எனவும் 16 அரசியல் கட்சிகள் ஏற்கனவே குடியரசுத் தலைவரிடம் முறையிட்டன.

அதைத்தொடர்ந்துமு, தேரதல் ஆணையம், நமது நாட்டிலுள்ள  மின்னணு இயந்திரம் உலகிலேயே பாதுகாப்பானது என்றும், அதில் முறைகேடுக்கு வாய்ப்பே இல்லை என்றும், முறைகேடை நிரூபிக்க முடியுமா என்று சவாலும் விடுத்தது.

ஆனால், தேர்தல்ஆணையத்தின் சவாலை பெரும்பாலான கட்சிகள் ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டன. ஆனால், மார்க்சிஸ்ட் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகள் மட்டுமே  தேர்தல் ஆணையத்தின் சவாலை சந்திக்க தயார் என்று கூறியிருந்தன.

இதற்கிடையில், மின்னணு வாக்கு இயந்திரங்களில் குளறுபடி உள்ளதாக ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள்  சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பானது என கூறி உள்ளது.

2019 ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மின்னணு வாக்கு இயந்திரம் ஒப்புகை சீட்டுடன் பயன் படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

You may have missed