ஆனைமலையில் சண்டை: யானை பலி..

பொள்ளாச்சி வனப்பகுதியில் ஆனைமலை புலிகள் சரணாலயம் உள்ளது.

இங்கு கடந்த திங்கள் கிழமை இரண்டு ஆண் யானைகள் ஆக்ரோஷமாக சண்டையிட்டுள்ளன.
அவற்றின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு வன அதிகாரிகள் விரைந்தனர்.

ஆண்டிப்பாறை என்ற இடத்தில் இரு யானைகள் தந்தங்களால் ஒன்றை ஒன்று குத்திக்கொண்டு சண்டை போடுவதை பார்த்துள்ளனர். அவர்களால் யானைகள் பக்கத்தில் நெருங்க முடியவில்லை.

இரண்டு யானைகளும் சண்டை போட்டபடியே அடந்த காட்டுக்குள் சென்றுள்ளன.

காலை 10 மணிக்கு ஆரம்பித்த சண்டை பல மணி நேரம் நீடித்துள்ளது, மாலை 4 மணி வாக்கில் ஒரு ஆண் யானை செத்துக்கிடந்ததை கண்ட வன அலுவலர்கள், அதிர்ச்சி அடைந்தனர்.

’’வனப்பகுதியில் யார் பெரியவன் ?’’என்பதற்கான போட்டியில் இரு யானைகளும் யுத்தம் செய்துள்ளதாக வன அலுவலர்கள் கூறினர்.

-பா.பாரதி.