பெர்லின் கண்காட்சி டென்னிஸ் – உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா சாம்பியன்!

--

பெர்லின்: ஜெர்மனியின் நடைபெறும் பெர்லின் கண்காட்சி மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா சாம்பியன் பட்டத்தை வென்றார்.

‘பெட் ஏசஸ் பெர்லின்’ என்ற பெயரில், பெண்களுக்கான கண்காட்சிப் போட்டி நடைபெறுகிறது. இதில், ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா – செக் குடியரசின் பெட்ரா கிவிட்டோவா மோதினர்.

இதில், முதல் செட்டில் தோல்வியடைந்த எலினா, அடுத்த 2 செட்களிலும் போட்டியை தனதாக்கி சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிப்போட்டி, எலினா சார்பாக, 3-6, 6-1 மற்றும் 10-5 என்ற கணக்கில் நிறைவடைந்தது.