ஸ்டார்ஸ்பர்க் மகளிர் டென்னிஸ் – ஒற்றையர் பட்டம் வென்றார் சுவிட்டோலினா!

பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் ஸ்டார்ஸ்பர்க் பெண்களுக்கான சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடரில், ஒற்றையர் பிரிவில் உக்ரைன் நாட்டின் எலினா சுவிட்டோலினா சாம்பியன் கோப்பையை வென்றார்.

இவர், இறுதிப்போட்டியில் கஜகஸ்தான் நாட்டின் ரைபகினாவை எதிர்த்து மோதினார்.

முதல் சுற்றை 6-4 எனக் கைப்பற்றிய எலினா சுவிட்டோலினா, இரண்டாவது செட்டில் 6-1 என்ற கணக்கில் இழந்தார். பின்னர், மூன்றாவது செட்டை 6-2 என்று வென்று, வெற்றிக் கோப்பையை தனதாக்கினார்.