செவ்வாய் கிரகம் போகலாம் வாங்க: அழைக்கும் இளைஞர்

அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க், “விரைவில் செய்வாய் கிரகத்தில் வீடு கட்டி குடியேறலாம்” என்கிறார்

ஸ்பேஸ் எக்ஸ் என்பது Space exploration Technologies Corporation  என்பதின் சுருக்கம் ஆகும்.  தென் ஆப்ரிக்காவில் பிறந்த மஸ்க் இதன் தலைமை செயல் அகிகாரியாக பதவி வகிக்கிறார்,  இவர் கனடா, அமெரிக்க நாடுகளில் புகழ் பெற்ற விண்வெளி ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிறுவனத்தை இவர் 2002ஆம் ஆண்டு ஆரம்பித்தார்.  அப்போதே அந்த நிறுவனத்தின் லட்சியம், குறைந்த விலையில் விண்வெளிப் போக்குவரத்தை சாத்தியமாக்குவது என சொன்னார்.

மெக்சிகோ நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு ஆய்வரங்கத்தில் மஸ்க், ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அழைத்துக் செல்லப்போவதாகவும், அதற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் கட்டணம் ஆகும் எனவும் கூறி, தான் அமைத்திருக்கும் பயணிகள் விண்கலத்தின் மாடலையும் வெளியிட்டார்.

கடந்த சில மாதங்களாக அவர் ஆற்றிய உரைகளின் தொகுப்பை தற்போது ‘அகடமிக் ஜர்னல் நியூ ஸ்பேஸ் இதழில் ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரையாக வெளியுட்டாள்ளார்.

இவர் தனது  வாழ்நாளுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புகளை ஏற்படுத்தப் போவதாகவும். விண்வெளி ஆய்வாளர்களுக்கும், ராக்கெட் பொறியாளர்களுக்கும் இப்போதிருக்கும் மிகப்பெரிய சவாலே செவ்வாய் கிரகத்துக்குப் போவதற்கு ஆகும் செலவுதான் எனவும் கூறி உள்ளார்.   மேலும், செவ்வாய்க்கு மனிதர்களை ஏற்றிச்செல்லும் விண்கலங்கள் வடிமைப்பது பற்றிய ஒருங்கிணைந்த ஆய்வு நடைபெற்று வருகிறதாகவும். செவ்வாய் கிரகத்தில் கட்டடங்கள் கட்டுவது தொடர்பான தனது கனவு விரைவில் நனவாகும் எனவும்.தனது லல்சியமே வாழ்நாளுக்குள் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புகளை உருவாக்குவதாகும்’ என்று அதில் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார், இந்த 45 வயது இளைஞரான எலன் மஸ்க்.

செவ்வாய் கிரகத்துக்குப் போவது பற்றி கடந்த பத்து வருடங்களாகவே ஆய்வும் பேச்சுமாக இருக்கிறார் மஸ்க். அறிவியல் தொழில்நுட்பத்தின் மீதான நம்பிக்கை மற்றும் யதார்த்தம் ஆகியவற்றை உணர்ந்துதான், ‘செவ்வாய்க்கு என் வாழ்நாளுக்குள் போய் குடியிருப்புகள் அமைப்பேன்’ என்று உறுதி அளிக்கிறார் இந்த இளைஞர்.