ஜகர்தா:

கார்த்தாவில் சித்திரவதை செய்யப்பட்ட ஐதராபாத் பெண்ணை இந்திய தூதரக அதிகாரிகள் வேண்டுகோளுக்கு இணங்க ஆஸ்திரேலிய அதிகாரிகள்  விசாரித்து, அவரை விரைவில் இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து உள்ளனர்.

ஐதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஹீனா பேகம் என்பவர் திருமணம் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அங்கு கணவனால் சித்திரவதைக்கு உள்ளானார்.  இவருக்கு 2 வயதில் குழந்தையும் உள்ளது.

கணவர் குடும்பத்தாரின் கொடுமையை சகிக்க முடியாமல், தன்னை மீண்டும் ஐதராபாத்துக்கே அனுப்பி விடும்படி கெஞ்சியும், அவரை அனுமதிக்காமல் மேலும் கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து அவர், தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருந்தார். இதைத்தொடர்ந்து  ஹீனா பேகமின் தாயார் நஜ்மா பேகம் மத்திய வெளி விவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தனது மகளுக்கு உதவுமாறு கடிதம் எழுதியிருந்தார். இது தொடர்பாக இந்திய தூதரகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய தூதரகம் இந்தோனேசிய தூதரகத்தை தொடர்பு கொண்டு கூறியதைத் தொடர்ந்து, அதிகாரிகள் ஹீனா பேகம் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தி, இந்திய தூதரகத்துக்கு பதில் அளித்த அதிகாரிகள், ஹீனா பேகத்தை சந்தித்து விசாரித்ததாகவும், தற்போது அவர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார். அவர்  கோரியபடி, அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளது.

அதுபோல, கேரளாவைச் சேர்ந்தவரும், இந்தோனேசியாவில் வசிக்கும் அவரது மருமகன் பூஜிகுத் ஃபஸ்லுல் ரஹ்மான் தனது மகளை துன்புறுத்தியதாக நஜ்மா குற்றம் சாட்டினார். தீக்காயங்களுக்கு ஆளானதாகக் கூறப்படும் கணவனால் ஏற்பட்டதாகக் கூறப்பட்ட தீக்காயங்களுக்குப் பிறகு தனது மகளின் புகைப்படங்களையும் அவர் அனுப்பினார்.

இந்த விவகாரம் குறித்தும்  விசாரணை நடத்திய இந்திய தூதரகம், அந்த பெண்ணையும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்து உள்ளது.