அவசரத்திற்கு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல ஆட்டோ… திருச்சியில் தனியார் அமைப்பு அசத்தல்…

திருச்சி:

ரடங்கு காரணமாக பல நோயாளிகள், கர்ப்பிணிகள் , தொடர் சிகிச்சை பெற்று வருபவர்கள் கடுமையான பாதிப்புக்கு ஆளாகி உள்ள நிலையில், அவர்களை  மருத்துவமனைக்கு மக்கள் செல்ல அவசரகால ஆட்டோ திட்டம் திருச்சியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை திருச்சியைச் சேர்ந்த உயிர்காக்கும் கரங்கள் அறக்கட்டளை எடுத்து, ஆட்டோ சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதற்காக பிரத்யேக செயலியும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இந்த பொதுசேவை நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டது.  அதைத்தொடர்ந்து,  அவசர கால ஆட்டோக்கான டோல் ஃபிரி நம்பர் மற்றும்  இணையதளம், ஆப் அறிமுகம் செய்யப்பட்டது.

அவசர தேவைக்கு  8448107108  எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ukkeservice.com என்ற இணையதளம் மூலமும் ukk ஆப் மூலமும் ஆட்டோ புக்கிங் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த சேவைக்காக ஒவ்வொரு வார்டுக்கும் தலா 2 ஆட்டோக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும், 24 மணி நேர தொகை தொடரும் என்று அறிவித்திருப்பதுடன், இதற்கா பிரத்யேக பாஸ் காவல்துறையில் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து கூறிய உயிர்காக்கும் கரங்கள் அறக்கட்டளை நிறுவனர்  கபூர்,  இந்த அவசர ஆட்டோவை ஓட்டும் ஓட்டுநர்கள் மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்டவற்றை அணிந்திருப்பார்கள். பயணிகள் ஏறி இறங்கிய பிறகு ஸ்பிரே மூலம் ஆட்டோக்கள் தூய்மைப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.