தஞ்சாவூர்,

ஞ்சாவூர் அருகே  திருவிடைமருதூர்  அருகே உள்ள கிராமத்தில் ஓஎன்ஜி நிறுவனத்தினர் எரிவாயு குழாய் பதிக்க  முயற்சி செய்தனர். இதையறிந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.

ஆனால், அப்பகுதியில் மத்திய அரசு நிறுவனமான ஓஎன்ஜிசி நிறுவனம் எண்ணை குழாய் பதிக்க தமிழக அரசு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதி யில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக அப்பகுதி மக்கள் கொதித்து போய் உள்ளனர்.

தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற எரிவாயு எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக இயற்கை வளம் பாதிக்கப்படுவதாக என்று கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெடுவாசல் அருகே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராடி வருக்ன்றனர்.

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் எண்ணெய் கிணறு அமைத்தால் நிலத்தடி நீர் மாசுபடுவதாக பொதுமக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்துவந்தனர்.

இந்நிலையில் அந்நிறுவனம் எரி வாயு எடுக்க புதிய குழாய்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது.

இதற்கும் பொதுமக்கள் சார்பில் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் எரிவாயு எடுப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் வேளையில், மத்திய அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் எதிர்ப்பை மீறி ஆங்காங்கே எரிவாயு சோதனை நடத்த முயற்சித்து வருகிறது.

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பை தமிழக போலீசார் வழங்கி வருகின்றனர். இதன் காரண மாக தமிழக அரசு எரிவாயு  திட்டத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளித்து வருவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

ஏற்கனவே தமிழகத்தில் எரிவாயு திட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்காது என்ற கூறி வந்த வேளையில், தற்போது ஆங்காங்கே நடைபெற்று வரும் சோதனைகளுக்கு தமிழக அரசு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் மறைமுகமாக உதவி வருகிறது என்பது பட்டவர்த்தனமாக தெரிய வந்துள்ளது.

தற்போதும் தஞ்சை அருகே ஓஎன்ஜிசி நிறுவனம் சார்பில் எரிவாயு சோதனை நடத்தப்படும் இடத்தில்சு மார் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது ஓஎன்ஜிசி எரிவாயு குழாய் பதிக்கும்,  திருவிடைமருதூர்  கிராமத்தில் மக்கள் ஒன்று கூடிப் பேசுவதற்கோ, சிலர் சேர்ந்து நிற்பதற்கோ போலீசார் அனுமதிப்பதில்லை. சாதாரணமாக வீடுகளில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது.  அப்பகுதி யில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நிலவுவதாக அப்பகுதி மக்கள் கூறி உள்ளனர். இதன் காரணமாக அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் மக்கள் கொதித்து போய் உள்ளனர்.

போலீசாரின் கெடுபிடி காரணமாக சிலர் வீடுகளைக் காலி செய்து விட்டு கிராமத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.